/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கதேசத்தினர் பதுங்கல் போலீஸ் தீவிர கண்காணிப்பு
/
வங்கதேசத்தினர் பதுங்கல் போலீஸ் தீவிர கண்காணிப்பு
ADDED : ஜன 16, 2025 11:42 PM
திருப்பூர்:வட மாநிலத்தினர் போர்வையில், திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகரில் கடந்த இரு வாரங்களில் மட்டும், 40 வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்து வந்தவர்கள்.
இவர்களை அழைத்துவந்த ஏஜென்ட்கள், போலி ஆவணங்கள் மூலம் ஆதார் கார்டு வாங்க உதவியவர்கள் குறித்து கோவை தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
சில மாதங்கள் முன் வங்கதேசத்தினரை கைது செய்தபோது, போலி ஆவணங்கள் மூலம், ஆதார் கார்டு பெற்று கொடுத்த மாரிமுத்து, 45, என்பவரை அடுத்தடுத்த வழக்குகளில் போலீசார் கைது செய்தனர். தற்போது, அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'இரு வாரங்களில் கைதான, 40 பேரில் பெரும்பாலானோர் ஆறு மாதத்துக்குள் திருப்பூர் வந்தவர்கள்.
'இவர்கள் தனித்தனியாக தங்கி வேலை செய்யாமல், நிறுவனத்தில் வழங்கப்படும் அறை அல்லது வட மாநிலத்தினர் தங்கியுள்ள பகுதியில் தங்கிக் கொள்கின்றனர். இதனால், மற்றவர்களுக்கு சந்தேகம் வருவதில்லை.
'இவர்கள் தங்கியுள்ள விடுதிகள், வடமாநிலத்தினர் தங்கியுள்ள பகுதிகள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளன. கைது செய்யப்பட்டவர்களுடன், வேறு யாரெல்லாம் திருப்பூர் வந்தனர் என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது' என்றனர்.