/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கியில் கடன்: மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு
/
வங்கியில் கடன்: மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 06, 2025 12:34 AM

திருப்பூர்; வங்கிகளில் மானியக் கடன் வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர், பி.என். ரோடு அண்ணா நகர் - எம்.ஆர்.ஏ. திருமண மண்டபத்தில், 5வது திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடந்தது.
மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேஷ் முன்னதாக வர வேற்றார். மாநில தலைவர் வில்சன், பொருளாளர் சக்ரவர்த்தி, துணை தலைவர் ரமேஷ்பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலச் சட்டம், மாற்றுத்திறனாளிகள் அனைத்து இடங்களிலும் எளிதாக சென்று வரும் நிலை இருக்க வேண்டும் என்கிறது. பல்வேறு அரசு அலுவலகங்களில் இந்த அமைப்பு கிடையாது.
திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வருவதற்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும்.
தமிழக அரசு உரிய அடையாள அட்டை பெற்று உரிய சதவீதம் இருந்தும் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை பிறப்பித்தும், உதவித் தொகை வழங்கப்படாமல் உள்ளது. தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும்.
அரசு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் மானிய கடன் வழங்க வேண்டும். வங்கிகள் அதை தர மறுக்கின்றன. கடனுக்கு உத்தரவாதம் கேட்கப்படுகிறது. இதை முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் மாவட்டத்தின் பல பகுதி களிலிருந்தும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் மாலினி நன்றி கூறினார்.