ADDED : ஜூன் 26, 2026 11:29 PM

அ நிறம் | அளவு
பல்லடம்: பல்லடம் மற்றும் சுற்றுவட்டார தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விதிமுறை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. நிகழ்ச்சிகள் முடிந்த பிறகும் அவை அகற்றப்படாமல் கிழிந்து தொங்குவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கிழிந்து விழுந்த ராட்சத பேனர் வாகன ஓட்டி ஒருவர் மீது விழுந்து காயம் ஏற்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
விதிமுறை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
