/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோரம் கொட்டப்படும் பனியன் நிறுவன கழிவுகள்
/
சாலையோரம் கொட்டப்படும் பனியன் நிறுவன கழிவுகள்
ADDED : டிச 25, 2025 05:49 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகரில்,திடக்கழிவு மேலாண்மை விதி அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தினசரி, 100 கிலோவுக்கு மேல் குப்பையை வெளியேற்றும் நிறுவனங்கள், ஓட்டல் நிர்வாகத்தினர், அவற்றை தாங்களே கையாள வேண்டும்; தரம் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது தான் விதி, அல்லது பொது இடங்களில் கொட்டாமல், மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது. இப்பணிக்கு, கட்டணம் வசூலிக்கவும், மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், நகரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனத்தினர், பனியன் கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி பிரதான ரோட்டோரம், நல்லாறு மற்றும் நொய்யலாற்றங்கரையில் குவியலாக கொட்டி விடுகின்றனர்; பல நேரங்களில் அவை எரியூட்டப்படுகின்றன; இதனால் எழும் துர்நாற்றம், சுவாசக் கோளாறு ஏற்படுத்துகிறது.
இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது மாநக ராட்சி நிர்வாகம் அபராத நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

