/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் கான்ட்ராக்டர் கொலை: வாலிபர் கைது
/
பனியன் கான்ட்ராக்டர் கொலை: வாலிபர் கைது
ADDED : அக் 01, 2024 12:06 AM
திருப்பூர் : திருப்பூரில், பனியன் நிறுவனம் ஒப்பந்ததாரரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வீரபாண்டி, முருகம்பாளையத்தை சேர்ந்தவர் அழகுராஜா, 37; பனியன் நிறுவன ஒப்பந்ததாரர். அதே பகுதியை சேர்ந்த வசந்த், 20; சிறிய அளவில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில் நிமித்தமாக பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகினர்.
நேற்று முன்தினம் இரவு முருகம்பாளையத்தில் மது அருந்தி உள்ளனர். இருவருக்குமிடையே போதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வசந்த், கத்தியால் அழகுராஜாவை குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வீரபாண்டி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வசந்தை போலீசார் கைது செய்தனர்.