/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் திருட்டு; 4 பெண்கள் கைது
/
பனியன் திருட்டு; 4 பெண்கள் கைது
ADDED : மே 09, 2025 05:50 AM
திருப்பூர்; பனியன் நிறுவனத்தில், பனியன்களை திருடிய நான்கு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பி.என்., ரோடு, திருமலை நகரை சேர்ந்தவர் ஷாருக்கான, 24. அப்பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் நேரத்தில், பனியன் நிறுவனத்துக்குள் இருந்து சில பெண்கள் பனியன்களை திருடி சென்றதாக அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். அதில், ஈரோடு, பங்களாபுதுாரை சேர்ந்த பவித்ரா, 26, சுசிலா, 21,பாக்கியலட்சுமி, 33 மற்றும் பழனியம்மாள், 38 என, நான்கு பேரும், பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள, நுாறு பனியன்களை திருடியது தெரிந்தது. புகாரின் பேரில், நான்கு பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

