/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு : 20ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உற்பத்தியாளர் கூட்டுக்குழு அழைப்பு
/
பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு : 20ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உற்பத்தியாளர் கூட்டுக்குழு அழைப்பு
பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு : 20ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உற்பத்தியாளர் கூட்டுக்குழு அழைப்பு
பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு : 20ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உற்பத்தியாளர் கூட்டுக்குழு அழைப்பு
ADDED : நவ 08, 2025 11:35 PM
திருப்பூர்: சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக, 20ம் தேதி மாலை, 4:30 மணிக்கு நடக்கும் முதல்கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு, தொழிற்சங்க கூட்டுக்குழுவுக்கு, உற்பத்தியாளர்கள் தரப்பில், அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாக்கப்படுகிறது. கடந்த, 2021ம் ஆண்டு, 32 சதவீத சம்பள உயர்வுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது; அது, கடந்த செப்., மாதத்துடன் முடிவடைந்தது.
இதற்காக, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி.,- எல்.பி.எப்., - எம்.எல்.எப்., -எச்.எம்.எஸ்., - ஐ.என்.டி.யு.சி., - ஏ.டி.பி., மற்றும் பி.எம்.எஸ்., சங்கங்கள் சார்பில், கூட்டுக்குழு அமைத்து, பொதுவான சம்பள உயர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு, 150 சதவீத சம்பள உயர்வு, பஞ்சப்படி, வாடகைப்படி உயர்வு உள்ளிட்ட பொது கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, உற்பத்தியாளர் சங்கங்களும், பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டன.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், கடந்த 4ம் தேதி, உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டம் நடந்தது. அதில், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சமைா), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம், டீமா, டெக்மா, சிம்கா ஆகிய ஆறு சங்கங்கள் இடம்பெற்றுள்ள கூட்டுக்குழுவின் தலைவராக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கூட்டுக்குழுவில் எடுத்த முடிவின்படி, வரும் 20ம் தேதி, பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர் சங்கங்கள் கூட்டுக்குழு சார்பில், சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கையை தெரிவிக்க வருமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக...
இதுகுறித்து உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,''பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பாக, தொழிற்சங்க கூட்டுக்குழு எங்களிடம் கோரிக்கை வைத்தது. அதன்படி, உற்பத்தியாளர் சங்கங்கள் ஒருங்கிணைந்து, கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க கூட்டுக்குழு, 20 ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடக்கும், பேச்சுவார்த்தைக்கான முதல் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கோரிக்கையை முன்வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளோம்,'' என்றார்.
கூட்டுக்குழுவில் எடுத்த முடிவின்படி, வரும் 20ம் தேதி, பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர் சங்கங்கள் கூட்டுக்குழு சார்பில், சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கையை தெரிவிக்க வருமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

