/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., வாய்க்காலில் அடைப்பு; சாலையில் பாய்ந்தது தண்ணீர்
/
பி.ஏ.பி., வாய்க்காலில் அடைப்பு; சாலையில் பாய்ந்தது தண்ணீர்
பி.ஏ.பி., வாய்க்காலில் அடைப்பு; சாலையில் பாய்ந்தது தண்ணீர்
பி.ஏ.பி., வாய்க்காலில் அடைப்பு; சாலையில் பாய்ந்தது தண்ணீர்
ADDED : பிப் 08, 2025 11:41 PM

திருப்பூர், : பி.ஏ.பி., வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால், பொங்கிய தண்ணீர், ரோடுகளில் பாய்ந்ததால், கோவில்வழி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.,), மூன்றாம் மண்டல பாசனத்துக்காக, கடந்த 29ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கே.ஆண்டிபாளையம் வாய்க்காலில் இருந்து, நல்லகாளிபாளையம் வழியாக, கோவில்வழி வாய்க்காலுக்கு நேற்று தண்ணீர் வந்துசேர்ந்தது.
அதிகாலை வந்து சேர்ந்த தண்ணீர், கோவில்வழியில் உள்ள சிறுபாலத்தில் ஏற்பட்ட அடைப்பால், பொங்கி மற்ற பகுதிகளை நோக்கி பாய்ந்தது.
காலியிடங்களில் தேங்கிய பிறகு, குடியிருப்புகள் இருக்கும் தாழ்வான பகுதிகளை நோக்கி பாய்ந்து சென்றது. திடீர் வெள்ளப்பெருக்கால், அப்பகுதி மக்கள் பரபரப்பாகினர்.
பொதுமக்கள் தகவல் அடிப்படையில், பி.ஏ.பி., திட்ட அலுவலர்களும் நேரில் வந்து பார்வையிட்டனர்.
உடனடியாக, தண்ணீரை வேறு வாய்க்காலுக்கு திருப்பிவிட்டு, பாலத்துக்குள் இருக்கும் அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பி.ஏ.பி., பகிர்மான குழு தலைவர் மணி கூறுகையில், 'பாலத்துக்குள் ஏற்பட்ட அடைப்பால் தண்ணீர் பொங்கி குடியிருப்புகளை சூழ்ந்தது. பி.ஏ.பி., அதிகாரிகளிடம் தெரிவித்து, தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
உடனுக்குடன், பாலத்தில் உள்ள அடைப்பை சரிசெய்து, தண்ணீர் மீண்டும் விட வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் வீதம், ஐந்து சுற்றுகள் தண்ணீர் கிடைக்கும்.
தண்ணீர் நிறுத்தப்பட்டதால், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் தவிர்க்கப்பட்டுள்ளது,'' என்றார்.