ADDED : டிச 15, 2025 05:34 AM
ரூ.10 கோடி மதிப்பில், பி.ஏ.பி., திட்டத்தின் கீழுள்ள, 154 கால்வாய்கள் துார்வாரும் பணி துவக்க விழா நடந்தது.
பாசன திட்டத்தின் ஆதாரமாகவும், திருமூர்த்தி அணையிலிருந்து பாசன நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ள,பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.அதன் அடிப்படையில், 154 பணிகள் மேற்கொள்ள, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
திருமூர்த்தி கோட்டத்தில், 44 பணிகள், ரூ.2.88 கோடி, பரம்பிக்குளம் கோட்டத்தில், 27 பணிகள், ரூ.2.15 கோடி, ஆழியாறு கோட்டம், 83 பணிகள், ரூ.4.97 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. பி.ஏ.பி.,பாசன திட்டத்தின் கீழ் உள்ள கால்வாய்கள் துார்வாரும் பணி துவக்க விழா, உடுமலை அருகேயுள்ள வரதராஜபுரத்தில் நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எம்.பி.,ஈஸ்வரசாமி, பி.ஏ.பி., கோவை மண்டல தலைமை பொறியாளர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் கார்த்தி கேயன், செயற் பொறியாளர்கள் பிரபாகரன், நரேந்திரன், சிவக்குமார் மற்றும் திட்டக்குழு, பகிர்மான குழு நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
