/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., கால்வாய்களில் கோழிக்கழிவுகள் சங்கமம்
/
பி.ஏ.பி., கால்வாய்களில் கோழிக்கழிவுகள் சங்கமம்
ADDED : டிச 03, 2024 11:50 PM

நாய்கள் கொலை
பல்லடம், ஜல்லிபட்டியில் விஷம் வைத்து நாய்கள் கொல்லப்படுகின்றன. மர்மமான முறையில் நாய்கள் இறப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
- பொன்னுசாமி, ஜல்லிபட்டி.
கொசுத்தொல்லை
பல்லடம் நகராட்சி, நான்காவது வார்டு, குமரன் வீதியில் கொசுமருந்து தெளிக்க வேண்டும். கொசுத்தொல்லை மாலை நேரங்களில் அதிகமாக உள்ளதால், முதியோர், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
- சேகர், குமரன் வீதி.
பல்லடம் - பொள்ளாச்சி மற்றும் பல்லடம் - உடுமலை மெயின் ரோட்டை கடந்து செல்லும் பி.ஏ.பி., கிளை கால்வாய்களில் இரவு, அதிகாலை நேரத்தில், கோழிக்கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுகின்றன. அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
- ராஜசேகர், பல்லடம்.
நாய்த்தொல்லை
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- செல்வராஜ், தென்னம்பாளையம். (படம் உண்டு)
குப்பைமயம்
கணபதிபாளையம் - அல்லாளபுரம் ரோடு, கருப்பராயன் நகர், வேலா அவென்யூவில் வழிநெடுகிலும் குப்பை கொட்டியுள்ளனர். குப்பை அள்ள வேண்டும். இப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்.
- முத்துலட்சுமி, கருப்பராயன் நகர். (படம் உண்டு)
சுகாதாரச் சீர்கேடு
திருப்பூர், பல்லடம் ரோடு, வித்யாலயம் பகுதியில் குடிநீர் குழாய் அருகே தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். ஈக்கள் பெருக்கத்தால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- சுதாகரன் சபரீசன், வித்யாலயம். (படம் உண்டு)
குப்பை தேக்கம்
திருப்பூர், 55வது வார்டு, தாராபுரம் மெயின் ரோட்டில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். குப்பை தேக்கத்தால் வாகன ஓட்டிகள் சென்று வர வழியில்லாமல் உள்ளது.
- கிருஷ்ணசாமி, தாராபுரம் ரோடு. (படம் உண்டு)
ஒளிராத விளக்கு
திருப்பூர், பெரியாண்டிபாளையம், தனவர்ஷினி அவென்யூ, சித்தி விநாயகர் கோவில் வீதியில் ஒரு வாரமாக தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதியதாக பொருத்த வேண்டும்.
- ரமேஷ்கண்ணன், பெரியாண்டிபாளையம். (படம் உண்டு)
இருள்மயம்
திருப்பூர் வடக்கு, எம்.எஸ்., நகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்கு மூன்று வாரங்களாக எரிவதில்லை. வீதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)
மீண்டும் குழி
திருப்பூர், சபாபதிபுரம், டி.எம்.எப்., சுரங்க பாலத்தில் சாலை மீண்டும் குழியாகி உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் தரமான முறையில் சீரமைக்க வேண்டும்.
- நிரஞ்சனி, லட்சுமி நகர். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, சின்னசாமி அம்மாள் பள்ளி வீதியில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- நவ்ஷாத், கொங்கு மெயின் ரோடு. (படம் உண்டு)
ரியாக் ஷன்
பிரச்னைக்குத் தீர்வு
திருப்பூர், மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகர், தெற்கு விவேகானந்தர், 6வது வீதியில் மழைநீர் தேங்கி நிற்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தண்ணீர் நிற்குமிடத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது.
- ராஜவேல், எஸ்.ஆர்., நகர். (படம் உண்டு)