/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., உடுமலை கால்வாயில் பகிரங்க நீர் திருட்டு; பாசன விவசாயிகள் அதிர்ச்சி
/
பி.ஏ.பி., உடுமலை கால்வாயில் பகிரங்க நீர் திருட்டு; பாசன விவசாயிகள் அதிர்ச்சி
பி.ஏ.பி., உடுமலை கால்வாயில் பகிரங்க நீர் திருட்டு; பாசன விவசாயிகள் அதிர்ச்சி
பி.ஏ.பி., உடுமலை கால்வாயில் பகிரங்க நீர் திருட்டு; பாசன விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : அக் 04, 2024 07:24 AM

உடுமலை: உடுமலையில், பி.ஏ.பி., வாய்க்காலில் பகிரங்கமாக மோட்டார் அமைத்து, டேங்கருடன் கூடிய டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் நீர் திருடப்பட்டு வருவது, விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, இரண்டாம் சுற்று நீர் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், பிரதான கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்களில், ஓஸ் அமைத்தும், கால்வாய் கரைகளில் ஓட்டை அமைத்தும், வழியோரங்களிலுள்ள நிலங்களில் கிணறுகளுக்கும் நேரடியாக நீர் திருடப்பட்டு வருகிறது.
இதனால், விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைக்காமல், பாசன நீரை எதிர்பார்த்து சாகுபடி செய்த பயிர்கள் காய்ந்து வருகின்றன.
நீர் திருட்டை கண்காணிக்க, நீர் வளத்துறை, போலீசார், வருவாய்த்துறை, மின் வாரிய அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழு அமைத்தும், செயல்படாமல் உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து, பயிர்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக நடக்கும் பாசன நீர் திருட்டால், விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், உடுமலை கால்வாயில், 18வது கி.மீ., நேரடியாக கால்வாய் கரையில், மோட்டார் வைத்து, டேங்கருடன் கூடிய டிராக்டர்கள், லாரிகளில் நீர் திருடப்பட்டு, வணிக பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம், விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உடுமலை தாராபுரம் ரோட்டிலிருந்து, பாலப்பம்பட்டி செல்லும் நான்கு வழிச்சாலையின் புறவழிச்சாலையில் அமைத்துள்ள, உடுமலை கால்வாய் பாலத்தின் மேல், வாகனங்களை நிறுத்தி, பெரிய அளவிலான மின் மோட்டார் வைத்து, நேரடியாக ஓஸ் கால்வாயில் அமைத்து, நீர் திருடப்பட்டு வருகிறது.அருகிலுள்ள விவசாயிகள் விசாரித்த போது, தினமும், வாகனங்கள் வாயிலாக. 50க்கும் மேற்பட்ட லோடு தண்ணீர் திருடப்படுவதாகவும், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும், சட்ட விரோத நீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மின் இணைப்பு துண்டிப்பு, நீர் திருட்டில் ஈடுபட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.