/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி. நீர் பங்கீட்டில் குளறுபடி!: விவசாயிகள் குற்றச்சாட்டு
/
பி.ஏ.பி. நீர் பங்கீட்டில் குளறுபடி!: விவசாயிகள் குற்றச்சாட்டு
பி.ஏ.பி. நீர் பங்கீட்டில் குளறுபடி!: விவசாயிகள் குற்றச்சாட்டு
பி.ஏ.பி. நீர் பங்கீட்டில் குளறுபடி!: விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : ஜன 24, 2026 04:30 AM

திருப்பூர்: 'பி.ஏ.பி. பாசனத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, 30 முதல், 60 சதவீதம் நீர், பிற கால்வாய்களில் திறந்து விடப்பட்டதன் விளைவாகத்தான், கடைமடையில் வறட்சி நிலவுகிறது' என, விவசாய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
பி.ஏ.பி. திட்டத்தில், காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில், 48 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல ஆண்டுகளாக, பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் சார்ந்த விவசாயிகளுக்கு, சட்டப்படி நீர் பங்கீடு வழங்கப்படாமல், தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
கோர்ட் உத்தரவிட்டும், நீர் பங்கீடு செய்வதில் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது.இதுதொடர்பாக, அரசு துறைகளின் அனைத்து நிலைகளிலும், வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களிலும் தொடர்ந்து மனு வழங்கி வருகிறோம். இருப்பினும், எவ்வித முன்னேற்றமும் இல்லை.
உண்ணாவிரதம்இருக்க முடிவு எனவே, ஐகோர்ட் தீர்ப்பு அடிப்படையில் அனைத்து கிளை கால்வாய்களிலும் உடனடி சமச்சீர் நீர் பகிர்வு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பிற பி.ஏ.பி. பகுதிகளில், நடைமுறையில் உள்ளதை போன்று, ஒவ்வொரு மடையிலும், 7 நாட்கள் நீர் வழங்கும் முறையை நீதிமன்ற உத்தரவுபடி அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முயற்சியாக, அடுத்த மாதம், 22ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். காங்கயம், பகவதிபாளையம் பிரிவு, வீராணம்பாளையம் கிராமத்தில், தனியார் பட்டா நிலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

