/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'லைசன்ஸ்' இன்றி செயல்படும் 'பார்' ஒப்புக்கொண்ட ஊழியர்: மக்கள் அதிர்ச்சி
/
'லைசன்ஸ்' இன்றி செயல்படும் 'பார்' ஒப்புக்கொண்ட ஊழியர்: மக்கள் அதிர்ச்சி
'லைசன்ஸ்' இன்றி செயல்படும் 'பார்' ஒப்புக்கொண்ட ஊழியர்: மக்கள் அதிர்ச்சி
'லைசன்ஸ்' இன்றி செயல்படும் 'பார்' ஒப்புக்கொண்ட ஊழியர்: மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜன 16, 2024 02:34 AM
'லைசன்ஸ்' இல்லாமல், 'டாஸ்மாக்' பார் செயல்பட்டு வருவதாக ஊழியர்கள் ஒப்புக்கொண்டது, பல்லடத்தில், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம், கோவை திருச்சி ரோடு, பணப்பாளையம் அருகே, அரசு டாஸ்மாக் மதுக்கடை மற்றும், பார் செயல்பட்டு வருகிறது. லைசன்ஸ் பெறாமல் பார் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் இது குறித்து பார் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறுகையில், 'கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக லைசன்ஸ் பெறாமல் பார் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் அதிகாரிகளும் சரியான தகவல் அளிக்க மறுத்து வருகின்றனர்.
மறைமுகமாக யாரோ சிலருக்கு ஆதரவாக இதுபோன்ற 'பார்'கள் செயல்பட்டு வருவதாக சந்தேகம் எழுகிறது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, முறைகேடாக செயல்பட்டு வரும் பார்'களை இழுத்து மூட உத்தரவிட வேண்டும் என்றார்.
முன்னதாக, லைசன்ஸ் குறித்து சமூக ஆர்வலர்கள் கேட்டதற்கு, லைசன்ஸ் இல்லை என்றும், டெண்டர் எடுத்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், லைசன்ஸ் இன்றி 'பார்' செயல்பட்டு வருவதாக ஊழியர்களே ஒப்புக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.