/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பார்' ஆனது நிழற்குடை பொதுமக்கள் வேதனை
/
'பார்' ஆனது நிழற்குடை பொதுமக்கள் வேதனை
ADDED : ஜன 30, 2024 12:07 AM

பொங்கலுார்;பெருந்தொழுவு அருகே வெள்ளியம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் கடந்த, 20 ஆண்டுகள் முன்பு நிழற்குடை கட்டப்பட்டது. அந்த நிழற்குடை பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு உபயோகமாக இருந்தது.
சமீப காலமாக அதனை 'குடி'மகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்த துவங்கி விட்டனர். காலி மதுபாட்டில்கள், 'குடி'மகன்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், பீடி, சிகரெட் துண்டுகள் உள்ளிட்ட குப்பை கூளங்கள் நிறைந்து கிடக்கின்றன. நிழற்குடையை பயன்படுத்தவே பெண்கள் அச்சப்படுகின்றனர். பயணிகளுக்காக கட்டப்பட்ட நிழற்குடை பயனற்று கிடக்கிறது. 'குடி'மகன்கள் அட்டகாசத்தை கட்டுப்படுத்தி, அதை பயணிகள் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.