/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாரப்பாளையம் பள்ளி கற்றல் அடைவு சாதனை
/
பாரப்பாளையம் பள்ளி கற்றல் அடைவு சாதனை
ADDED : ஏப் 11, 2025 11:25 PM
திருப்பூர்; திருப்பூர், பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், '100 நாட்களில் 100 சதவீதம் கற்றல் அடைவு' திட்டமிடப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.நுாறு சதவீதம் கற்றல் அடைவு நிறைவு நிகழ்ச்சி நேற்று பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அப்பகுதி கவுன்சிலர் அன்பகம் திருப்பதி முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஜஸ்டின் ராஜ் கலந்து கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து, 100 சதவீதம் கற்றல் அடைந்ததாக அறிவித்தார்.
பெற்றோர் ஆசிரிய சங்க தலைவர் ஆட்டோ கோவிந்தராஜ், பொருளாளர் ஓதியப்பன் மற்றும் நிர்வாகிகள், பெற்றோர், பள்ளி மேலாண்மை குழுவினர் பங்கேற்றனர். தலைமையாசிரியர் அருணாதேவி நன்றி கூறினார்.