UPDATED : ஜூன் 08, 2026 05:30 PM
ADDED : ஜூன் 08, 2026 05:11 PM

அ நிறம் | அளவு
மனு அளிக்க வந்த பொதுமக்களை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில், இதுவரை இல்லாதவகையில், இரும்பு முள் கம்பி பொருத்திய பேரிகார்டுகளைப் போர்டிகோ பகுதியில் போலீசார் கொண்டு வந்து வைத்துள்ளனர்.
கலெக்டரைப் பார்க்க வந்த மக்கள், தங்கள் ஆடைகள் கிழிந்துவிடுமோ, உடலில் குத்திக் காயம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடனேயே கால்கடுக்கக் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. குழந்தைகளையும் அருகில் செல்லவிடாமல் பார்க்க வேண்டியிருந்தது. போலீசாரின் இந்த நடவடிக்கை அதிருப்தியடைய வைத்தது.
