/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிப்படை வசதி காங்., வலியுறுத்தல்
/
அடிப்படை வசதி காங்., வலியுறுத்தல்
ADDED : நவ 24, 2024 03:59 AM

திருப்பூர் : 'மாநகராட்சி, 48வது வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்,' என, மாநகராட்சி கமிஷனரிடம் காங்., சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர மாவட்ட காங்., தலைவர் கிருஷ்ணன், 48வது வார்டு கவுன்சிலர் விஜய லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோபால்சாமி உள்ளிட்டோர் நேற்று மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியை சந்தித்து அளித்த மனு விவரம்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் முக்கிய பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். மூன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட, நல்லுார், 48வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடைகால்வாய் பணி மந்தமாகியுள்ளது. பணியை விரைந்து முடிக்க வேண்டும். எங்கு திரும்பினாலும், மோசமாக உள்ள சாலைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.
தெருவிளக்கு இல்லாத பகுதியில், புதிய தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். ராக்கியாபாளையம், நல்லுார் ஜே.எஸ்., கார்டன் பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.

