/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிப்படை வசதி செய்ய வேண்டும்; நகராட்சி அலுவலகம் முற்றுகை
/
அடிப்படை வசதி செய்ய வேண்டும்; நகராட்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதி செய்ய வேண்டும்; நகராட்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதி செய்ய வேண்டும்; நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : பிப் 18, 2026 06:42 AM

அவிநாசி: அவிநாசி நகராட்சி, 1வது வார்டு காமராஜர் நகர், எம்.கே.பி.லே அவுட், மாருதி நகர், ஐஸ் கடை வீதி, நேதாஜி வீதி மற்றும் சேவூர் ரோடு ஆகிய பகுதிகளில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில், 35 ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் வெளியேற சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கேட்டு, மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் நேற்று அவிநாசி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'சாக்கடை கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் பல பகுதிகளில் வீட்டின் முன் கழிவுநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படுகிறது. அத்துடன் சாலை வசதிகளும் இல்லாததால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். இது குறித்து கவுன்சிலரிடம் பலமுறை கோரிக்கை அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,' என்றனர்.
இதற்கிடையில், அந்த வார்டு கவுன்சிலர் சிவப்பிரகாஷ் (தி.மு.க.), நகராட்சி அலுவலகம் வந்தார். உடனே, அவரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனரிடம் மனு அளித்தனர். உங்கள் கோரிக்கை குறித்து உடனடியாகநடவடிக்கை எடுப்பதாக இருவரும் உறுதி அளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

