ADDED : ஏப் 28, 2025 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கிளப், மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் ஆகியன சார்பில் கோடைக்கால பயிற்சி முகாம் துவக்க விழா, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 37 பேர் பங்கேற்றனர். மே, 18ம் தேதி வரை நடக்கும் முகாமில் பயிற்சியாளர் கூடைப்பந்தில் எளிதில் கோல் அடிப்பது, எதிரணியிடம் இருந்து பந்தை லாவகமாக கைப்பற்றுவது உள்ளிட்ட போட்டியின் நுணுக்கங்கள் கற்றுத்தர உள்ளனர். மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் நிர்வாகிகள் பயிற்சி முகாமை துவக்கி வைத்தனர். முகாம் குறித்த விபரங்களை 94430 58880 என்ற எண்ணில் அறிந்து கொள்ளலாம்.