/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை பாதுகாப்பு காரணமாக அறிவிப்பு
/
பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை பாதுகாப்பு காரணமாக அறிவிப்பு
பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை பாதுகாப்பு காரணமாக அறிவிப்பு
பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை பாதுகாப்பு காரணமாக அறிவிப்பு
ADDED : ஜன 08, 2024 01:19 AM

உடுமலை:மலைத்தொடரில் மழை பெய்து வருவதால், திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகே திருமூர்த்திமலையில், பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ளதால், இந்த அருவிக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
தற்போது, திருமூர்த்திமலைக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையில், நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது.
இதனால், நீர் வரத்து அளிக்கும் சிற்றாறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக பஞ்சலிங்க அருவியில், குளிக்க சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், மலையடிவாரத்தில், தடுப்புகளும் அமைத்து, கண்காணிப்பு செய்தனர்.
நேற்று விடுமுறை நாளாக இருந்ததால், திருமூர்த்தி மலைக்கு சுற்றுலா பயணியர் வருகை வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது. அய்யப்ப பக்தர்களும், கோவில் அருகில் செல்லும் பாலாற்றில், குளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அருவியில் நீர் வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.