ADDED : பிப் 26, 2026 05:54 AM

அ நிறம் | அளவு
பல்லடம்: பல்லடம் -பொள்ளாச்சி ரோடு, சித்தம்பலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 54. ஆட்டோ எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், 4 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 48 பேட்டரிகள் திருடு போயின. பல்லடம் போலீசார், 'சிசிடிவி' காட்சிகளின் உதவியுடன்,
விருதுநகர் மாவட்டம், ஆச்சாங்குளம் துரை, 51; தாராபுரம் கார்த்திகேயன், 23 ஆகியோரை கைது செய்தனர். பேட்டரிகள், கார் பறிமுதல் செய்யப்பட்டன.
இருவர் மீதும் திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் திருப்பூர் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பல்லடம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
