/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரொம்ப கவனமாக இருக்கணும்! பின்னலாடை துறையினருக்கு போலீசார் 'அட்வைஸ்'
/
ரொம்ப கவனமாக இருக்கணும்! பின்னலாடை துறையினருக்கு போலீசார் 'அட்வைஸ்'
ரொம்ப கவனமாக இருக்கணும்! பின்னலாடை துறையினருக்கு போலீசார் 'அட்வைஸ்'
ரொம்ப கவனமாக இருக்கணும்! பின்னலாடை துறையினருக்கு போலீசார் 'அட்வைஸ்'
ADDED : செப் 29, 2024 02:10 AM
திருப்பூர்: வெளிமாநில தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் பணி நியமனம் தொடர்பாக, கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுமென, மாநகர போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
தொழில் வளம் மிகுந் திருப்பூர், வந்தாரை வாழ வைக்கும் நகரமாக மாறியுள்ளது. எம்மாநிலத்தவர் வந்தாலும், சுதந்திரமாக வாழ முடியும் என்பது, கடந்த 10 ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வங்கதேசத்தை சேர்ந்தவர்களும், சட்ட விதிமுறைகளை மீறி, திருப்பூரில் வந்து மறைந்து வாழ்கின்றனர்.
மேற்கு வங்கத்தில், போலியாக ஆதார் பதிவு செய்துவிட்டு வருவதால், ஆதார் அடையாளத்துடன் தைரியமாக சுற்றித்திரிகின்றனர். போலீசார், தீவிரமாக விசாரித்து, அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தவரை கைது செய்து வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர் விவகாரத்தில், மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென, தொழில்துறையினர் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர் பணி நியமனம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
எச்சரிக்கை விடுத்த கமிஷனர்
-----------------------
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், போலீஸ் கமிஷனர் லட்சுமி, திருப்பூர் பனியன் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
வடமாநில தொழிலாளர் என்ற போர்வையில், வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் திருப்பூர் வந்துள்ளனர். இதுதொடர்பாக, தீவிர ஆய்வு நடந்து வருகிறது; சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருப்பூர் பனியன் தொழில்துறையினர், தீவிரமாக விசாரித்து, ஒன்றுக்குமேற்பட்ட ஆவணங்களை சரிபார்த்த பிறகே பணியில் சேர்க்க வேண்டும். மற்ற வெளிமாநில தொழிலாளர் பாதுகாப்பாக தங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சந்தேகத்துக்கு இடமளிக்கும் நபர்கள் இருந்தால், உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக, மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர் என்றால், தீவிர விசாரித்த பிறகே பணியில் சேர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் 'சைமா' இணை செயலாளர் பழனிசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், தொழிலாளர்களை அழைத்து வரும் ஏஜன்சியினர் பங்கேற்றனர்.
போலீசார் அறிவுறுத்திய விஷயங்கள்
---------------------------
* முழு விவரத்தை பெற்று, வடமாநில தொழிலாளர் பதிவேடு பராமரிக்க வேண்டும்* சம்பந்தப்பட்ட மாநிலத்தில், தொழிலாளர் வசிப்பிடத்துக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் வாயிலாக, அவர்கள் மீது குற்றவழக்கு பதிவு இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.* ஒவ்வொரு தொழிலாளர் விவரத்தை பதிவு செய்து பராமரிக்க வேண்டும். * சம்பள பட்டுவாடா, வங்கி கணக்கு வாயிலாக மட்டும் செய்ய வேண்டும்; ரொக்க பரிவர்த்தனையை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.* பயோமெட்ரிக் பதிவு சரிபார்க்க ஏதுவாக, 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தில், முறையாக பின்பற்ற வேண்டுமென வலியுறுத்த வேண்டும்.* தொழிலாளர்துறை, வெளிமாநில தொழிலாளர் விவரத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்து, அதில் பதிவு செய்ய வேண்டும்.
* தொழிலாளர் துறை பதிவில், 13 வகையான கேள்விகள் வருகிறது; அதை பூர்த்தி செய்து வெளியே சென்றாலும், 'வெளியேறிவிட்டார்' என்று நிறுவனங்கள் பதிவு செய்யலாம்.
* வடமாநில தொழிலாளரை அழைத்து வரும், ஏஜன்சிகள், முறையாக பதிவு செய்து இயங்குவதை உறுதி செய்யலாம்.
* திருப்பூரின் முக்கிய சங்கங்கள் ஒருங்கிணைந்து, பதிவு செய்த ஏஜன்டுகள் மூலமாக மட்டும், தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்.
* திருப்பூரில் உள்ள போக்குவரத்து விதிமுறை உட்பட, போலீசாரின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தை வேண்டும்.
* மருத்துவ ஆலோசனை, மனநல ஆலோசனைக்கு டாக்டர் நியமனத்து, அவ்வப் போது பரிசோதித்து ஆரோக்யத்தை சரிசெய்ய வேண்டும்.* தொழிலாளர்களை கண்காணிக்க, கண்காணிப்பு கேமரா வசதியை செய்து கொள்ள வேண்டும்.
வடமாநில தொழிலாளர் என்ற போர்வையில், வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் திருப்பூர் வந்துள்ளனர். இதுதொடர்பாக, தீவிர ஆய்வு நடந்து வருகிறது; சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்