/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பீச்' வாலிபால் போட்டி 'வித்ய விகாசினி' அசத்தல்
/
'பீச்' வாலிபால் போட்டி 'வித்ய விகாசினி' அசத்தல்
ADDED : பிப் 23, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;மாநில அளவில் அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையிலான 2023-24ம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான 'பீச்' வாலிபால் போட்டி சென்னை கோவளம் கடற்கரையில் சமீபத்தில் நடந்தது.
இதில், திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக, காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள வித்ய விகாசினி பள்ளியை சேர்ந்த மூத்தோர் பிரிவு மாணவர்கள் அணியின் ஸ்ரீ விஷ்ணு மற்றும் நிதின்குமார் ஆகியோர் பங்கேற்று, இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த பயிற்சியாளர்களை பள்ளி தாளாளர், நிர்வாக அதிகாரி, செயலாளர் உள்ளிட்டோர் பாராட்டினர்.