/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவரை, பீர்க்கன் விலை உயர்வு கேரட், பாகல் விலை சரிவு
/
அவரை, பீர்க்கன் விலை உயர்வு கேரட், பாகல் விலை சரிவு
அவரை, பீர்க்கன் விலை உயர்வு கேரட், பாகல் விலை சரிவு
அவரை, பீர்க்கன் விலை உயர்வு கேரட், பாகல் விலை சரிவு
ADDED : ஜூன் 19, 2025 04:32 AM
திருப்பூர் : திருப்பூர் காய்கறி மார்க்கெட்டில், அவரை, பீர்க்கன், தேங்காய் விலை நடப்பு வாரம் உயர்ந்துள்ளது; கேரட், பாகற்காய், முருங்கை விலை குறைந்துள்ளது.
திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், நடப்பு வாரம் கேரட், பாகற்காய் விலை கிலோவுக்கு பத்து ரூபாய் குறைந்துள்ளது. அதேநேரம், தேங்காய் விலை குறையாமல் கிலோ, 60 ரூபாயில் தொடர்கிறது. ஒரு தேங்காய், 22 - 28 ரூபாய். அவரை, பீர்க்கன்காய் முறையே, 70 மற்றும், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
காய்கறிகள் விலை நிலவரம் (ஒரு கிலோ - ஒரு ரூபாயில்):
கத்தரி, முதல் ரகம் - 60, இரண்டாம் ரகம் - 30. வெண்டைக்காய் - 30, தக்காளி - 16, பச்சை மிளகாய் - 50, புடலங்காய் - 30, அவரைக்காய் - 70, கொத்தவரங்காய் - 30, பீர்க்கன்காய் - 60, சுரைக்காய் - 15, பாகற்காய் - 50, முள்ளங்கி - 30, வாழைக்காய் - 30, சேனைக்கிழங்கு - 50, எலுமிச்சை - 110, அரசாணிக்காய் - 15, பூசணிக்காய் - 18, சின்ன வெங்காயம் - 60, பெரிய வெங்காயம் - 25, உருளைக்கிழங்கு - 45, முட்டைகோஸ் - 20, கேரட் - 50, பீட்ரூட் - 25, ஊட்டி பீட்ரூட் - 55, பீன்ஸ் - 60, காலிபிளவர் - 40, மேராக்காய் - 35, இஞ்சி - 55, முருங்கைக்காய் - 70, பப்பாளி - 30 ரூபாய். தேங்காய் கிலோ, 60 ரூபாய், வாழைத்தண்டு (ஒன்று) - 10, வாழைப்பூ (ஒன்று) - 12.