/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதை ஆசாமிக்கு 'பீர்' பாட்டில் குத்து
/
போதை ஆசாமிக்கு 'பீர்' பாட்டில் குத்து
ADDED : ஏப் 26, 2025 12:12 AM
வெள்ளகோவில்: வெள்ளகோவில், உப்புபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 48. பாரதிநகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 45. இருவரும் வெள்ளகோவிலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடிக்க வழக்கமாகச் சென்ற போது, பழக்கம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் வழக்கம் போல் டாஸ்மாக் மதுபான கடை பாரில், இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.அப்போது இருவரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் தகராறு முற்றிய நிலையில், பீர் பாட்டிலை எடுத்த சதீஷ்குமார், சுப்பிரமணியை மார்பு மற்றும் தோளில் குத்தியுள்ளார். இதில், காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். முதலுதவிக்கு பின், உயர் சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த வெள்ளகோவில்போலீசார் விசாரிக்கின்றனர்.

