/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரத்தை வெட்டும் முன் இளகவேண்டும் மனசு
/
மரத்தை வெட்டும் முன் இளகவேண்டும் மனசு
ADDED : ஆக 23, 2025 12:26 AM

பொங்கலுார்: பெருந்தொழுவு கண்டியன் கோவில் வழியாக மருதுரையான் வலசு செல்லும் ரோட்டில், 100 வயது கடந்த புளி, வேம்பு, ஆலம் உள்ளிட்ட பல்வேறு வகை மரங்கள் உள்ளன. கடந்த மாதம் திருப்பூருக்கு முதல்வர் வருவதாக இருந்தது.
அப்போது பொங்கலுார், கண்டியன் கோவில்,பெருந்தொழுவு வழித்தடத்தில் உள்ள மரத்தின் கிளைகளை இயந்திரங்களைக் கொண்டு தாறுமாறாக உடைத்தனர். இதனால் அந்த மரங்கள் குற்றுயிரும் குலையுயிருமாக காட்சியளிக்கின்றன. பொங்கலுார், பூசாரிபாளையம் வழியாக மின் கம்பம் நடும் பணி நடக்கிறது.
ரம்பத்தைக் கொண்டு அறுத்தால் மரத்திற்கு பாதிப்பு இருக்காது. அதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதால் இயந்திரங்களின் உதவியுடன் மரத்தை தாறுமாறாக உடைத்துள்ளனர். இதனால் மரம் விரைவில் பட்டு போகும் அபாயம் உள்ளது.
மரத்தின் கிளைகள் லேசாக காற்று அடித்தாலே முறிந்து ரோட்டில் செல்பவர் தலையில் விழும் அபாயம் உள்ளது. நுாற்றாண்டு பழமையான மரங்களை இயந்திரங்களைக் கொண்டு மரங்களே பட்டுப்போகும் வகையில் உடைப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இனி வருங்காலத்தில் இது போன்ற செயலில் மின்வாரியமோ, நெடுஞ்சாலை துறையோ ஈடுபடக்கூடாது. மரத்திற்கு அதிக பாதிப்பு இல்லாமல் கிளைகளை அறுத்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.