ADDED : மார் 11, 2024 01:24 AM
திருப்பூர்;கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (எண்:20642) தினமும் அதிகாலை, 5:00 மணிக்கு கோவையில் புறப்பட்டு, 11:30க்கு பெங்களூரு சென்றடைந்தது. மறுமார்க்கமாக மதியம், 1:40க்கு புறப்படும் ரயில் இரவு, 8:00 மணிக்கு கோவை வந்தடைந்தது. 'அதிகாலையில் ரயில் புறப்படுவதால், பெரும்பாலான பயணிகள் பயன்படுத்த முடிவதில்லை; ரயில் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும்,' என்ற கோரிக்கை எழுந்தது.
ரயில் பயணிகள் வலியுறுத்தலை ஏற்று, ரயில்வே நிர்வாகம், பெங்களூரு வந்தே பாரத் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, இன்று முதல் இனி, காலை, 7:25க்கு கோவையில் புறப்படும் வந்தே பாரத் ரயில், திருப்பூருக்கு, 8:03க்கு வரும்.
ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பயணித்து, மதியம், 1:50க்கு பெங்களூரு சென்றடையும். மதியம், 2:20க்கு பெங்களூருவில் மறுமார்க்கமாக புறப்படும் ரயில் (எண்:20641), இரவு, 7:31 க்கு திருப்பூர் ஸ்டேஷன் வரும். இரவு, 8:45க்கு கோவை சென்று சேரும்.
