ADDED : பிப் 10, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தெரிவித்த செய்தி குறிப்பில், ''தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து 94440 - 42322 என்ற மொபைல் போன் எண்ணில், பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும். தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்'' என தெரிவித்திருந்தார்.
அந்த மொபைல் போன் எண்ணுக்கு, தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என எண்ணிய பொதுமக்கள் சிலர் குறிப்பிட்ட மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது, தற்சமயம் இந்த எண் சேவையில் இல்லை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பதிவு செய்த குரல் ஒலிக்கிறது.

