/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்ரகாளியம்மன் திருவிழா: இன்று திருக்கல்யாணம்
/
பத்ரகாளியம்மன் திருவிழா: இன்று திருக்கல்யாணம்
ADDED : ஏப் 29, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; மானுபட்டி பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி, சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது.
உடுமலை அருகே, மானுபட்டி, இந்திரா நகர் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று முதல் துவங்கியுள்ளது. நேற்று காலையில், பக்தர்கள் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்தனர்.
சுவாமிகளின் ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து மாவிளக்கு மற்றும் பூ வளர்த்தல் ஊர்வலம் நடக்கிறது. நாளை திருவிழாவின் நிறைவாக, மஞ்சள் நீராட்டுவிழா, மறுநாள் சிறப்பு அபிேஷக பூஜையும் நடக்கிறது.