ADDED : செப் 27, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: திருப்பூர், 15 வேலம்பாளையம் டி.ஒய்.எப்.ஐ., கிளை சார்பில், சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங், 117வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகர குழு உறுப்பினர் மதியரசு, தலைமை வகித்தார். பகத்சிங் படத்துக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் அருள், சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங், குறித்து பேசினார். மா.கம்யூ., நகர செயலாளர் நந்தகோபால், கிளை செயலாளர்கள் சுப்பிரமணியம், வசந்தி, சரவணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.