ADDED : மார் 24, 2025 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : பரதமுனி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூரில் சம்ஸ்கார் பாரதி சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் மாவட்ட சம்ஸ்கார் பாரதி அமைப்பு சார்பில், பரதமுனி ஜெயந்தி விழா நேற்று, ஹார்வே குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. சம்ஸ்கார் பாரதி அமைப்பின் மாநில பொறுப்பாளர் ரவீந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து ெகாண்டார்.
ஹார்வே குமாரசாமி மண்டப அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். சம்ஸ்கார் பாரதி மாநில பொருளாளர் செந்தில்லிங்கம் முன்னிலை வகித்தார்.
சம்ஸ்கார் பாரதி அமைப்பின் குழுவினர் இசை நிகழ்ச்சி மற்றும் தனி ஆவர்த்தன மிருதங்க கச்சேரி ஆகியன நடந்தன. அதையடுத்து பவளக்கொடி கும்மியாட்டம் நடந்தது. சம்ஸ்கார் பாரதி மாவட்ட தலைவர் மஞ்சு ராஜராஜன் நன்றி கூறினார்.