தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பாரதி மதிப்பெண்களால் மகுடம் சூட்டிய பாரதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

பாரதி மதிப்பெண்களால் மகுடம் சூட்டிய பாரதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

பாரதி மதிப்பெண்களால் மகுடம் சூட்டிய பாரதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள்


UPDATED : மே 09, 2026 07:14 PM

ADDED : மே 09, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 07:14 PM ADDED : மே 09, 2026 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர், விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 516 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வெழுதினர். இவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நுாறு சதவீத தேர்ச்சிக்கு வித்திட்டனர்.

அறிவியல் பிரிவில் மாணவர் லித்தீஸ், கலைப்பிரிவில் மாணவி வர்ஷிகா ஆகியோர், 600க்கு, 593 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தனர். மாணவியர் தனுஷியா மற்றும் திவ்ய ஸ்ரீ ஆகியோர், 592 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம்; மாணவி தருணிகா ஸ்ரீ, 589 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். மேலும், 55 மாணவர்கள் பல்வேறு பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

தேர்வெழுதிய மாணவர்களில், 120 பேர், 550 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும்; 275 பேர், 500 மதிப்பெண்களுக்கு அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வில், முதல் மூன்றிடம் பெற்ற மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், துணைநின்ற பெற்றோரை, பள்ளி தாளாளர் மோகனாம்பாள், பள்ள தலைவர் மற்றும் முதல்வர் செந்தில்குமார் ஆகியோர், பாராட்டி பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us