sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்

/

 பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்

 பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்

 பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்


ADDED : ஜன 30, 2026 07:17 AM

Google News

ADDED : ஜன 30, 2026 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கயம் படியூர், நத்தக்காடையூர், கார்மெல் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கும், 571 மாணவ, மாணவியருக்கு, 27.47 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டது. மேலும், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.

காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில், காலநிலை மாற்றம் சார்ந்து இளைய தலைமுறை மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

இத்திட்டங்களை, அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், முத்துார் பேரூராட்சி தலைவர் சுந்தராம்பாள், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிவகுமாரி, டி.இ.ஓ., அருள்ஜோதி உட்பட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us