/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கஞ்சா கடத்திய பீகார் வாலிபர் கைது
/
கஞ்சா கடத்திய பீகார் வாலிபர் கைது
ADDED : மார் 16, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வடக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி சந்தேகப்படும் வகையில் வந்த வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர். அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜன், 20 என்பது தெரிந்தது.
சோதனையில், 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.