நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பீஹாரை சேர்ந்தவர் சந்திரன் குமார், 21; அம்மாபாளையத்தில் உள்ள, சகோதரர் வீட்டில் தங்கி, டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்து, 'கூட்ஸ் ெஷட்' அருகே ரயில்பாதையை கடந்து செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது, ஈரோட்டில் இருந்து, பாலக்காட்டை நோக்கி வந்த பாசஞ்சர் ரயில் மோதி பலியானார்; ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., பிரபாகர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.