தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நஞ்சராயன் குளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நஞ்சராயன் குளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நஞ்சராயன் குளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு


UPDATED : நவ 12, 2026 07:15 PM

ADDED : நவ 12, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 07:15 PM ADDED : நவ 12, 2026 07:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: பறவையியல் ஆராய்ச்சியாளர் சாலீம் அலியின் 142-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. திருப்பூர் இயற்கை கழகம் சார்பில், வனத்துறை அனுமதியுடன் நடந்த இந்தக் கணக்கெடுப்பில் 71 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உள்நாட்டுப் பறவையான கானாங்கோழி இங்கு காணப்பட்டது. தட்டைவாயன், நீலச்சிறகு வாத்து, கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகளும் பதிவாகின. கடந்த 15 நாட்களுடன் ஒப்பிடும்போது, தற்போது பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இயற்கை கழகத்தினர் தெரிவித்தனர். மழையால் குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து, பறவைகள் இரைதேடும் மண்திட்டுகள் நீரில் மூழ்கியதே இதற்குக் காரணம் என்றும் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us