ADDED : அக் 11, 2024 12:29 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் அறிக்கை: பிறப்பு, இறப்பு பதிவு விதிகளின்படி, குழந்தைகள் பிறந்த, 15 ஆண்டுக்குள் பெயருடன் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ய வேண்டியது அவசியம். கடந்த 2000ம் ஆண்டுக்கு முன் வரை பிறந்தவர்களுக்கு இதற்கான கால அவகாசம் இரு முறை நீட்டிக்கப்பட்டு, வரும் டிச., 31ம் தேதிக்குள் நிறைவடைகிறது. வரும் ஜன., 1ம் தேதி முதல், பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க 15 ஆண்டு வரை என்பது கட்டாயமாக்கப்படுகிறது. அதன் மூலம் 2009ம் ஆண்டுக்கு முன் பிறந்தோர், பிறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்ய இயலாது.
15 வயதுக்கு உட்பட்ட அனைவரும் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். மாநகராட்சியில் குழந்தை பிறந்து ஓராண்டுக்குள் இலவசமாக பதிவு செய்யலாம். அதற்கு மேல், 200 ரூபாய் தாமத கட்டணம் செலுத்த வேண்டும். பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயர் ஒரு முறை பதிவு செய்தால், மாற்ற இயலாது.