/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிமுறை மீறி மது விற்பனை; ஆதாரத்துடன் பா.ஜ., குற்றச்சாட்டு
/
விதிமுறை மீறி மது விற்பனை; ஆதாரத்துடன் பா.ஜ., குற்றச்சாட்டு
விதிமுறை மீறி மது விற்பனை; ஆதாரத்துடன் பா.ஜ., குற்றச்சாட்டு
விதிமுறை மீறி மது விற்பனை; ஆதாரத்துடன் பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : ஏப் 24, 2025 06:31 AM
பல்லடம்; பல்லடம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடைகள் விதிமுறை மீறி செயல்படுவதாக பல்லடம் நகர பா.ஜ., தலைவர் பன்னீர் செல்வகுமார், குற்றம் சாட்டியுள்ளார்.
பல்லடம் பஸ் ஸ்டாண்ட், பனப்பாளையம், ராயர்பாளையம், வெட்டுபட்டான் குட்டை, தாராபுரம் ரோடு, நாரணாபுரம் ஆகிய மதுக்கடைகளுக்கு விசிட் செய்த பன்னீர் செல்வகுமார், காலை, 7:30 மணிக்கே, கடைகளில் 'குடி'மகன்கள் குவிந்திருந்தது மற்றும் பார்கள் 'விழாக்கோலம்' பூண்டிருந்ததையும், மொபைல் போன் ஜி.பி.எஸ்., கேமரா உதவியுடன் வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளார்.
கலெக்டர், தாசில்தார், மதுவிலக்கு போலீசார், நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள், விதிமுறை மீறி இவ்வாறு மது விற்பனை நடப்பதை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என, பன்னீர்செல்வகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.