/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டவிரோத மது விற்பனை ஜோர் மது பார்களை பா.ஜ., முற்றுகை
/
சட்டவிரோத மது விற்பனை ஜோர் மது பார்களை பா.ஜ., முற்றுகை
சட்டவிரோத மது விற்பனை ஜோர் மது பார்களை பா.ஜ., முற்றுகை
சட்டவிரோத மது விற்பனை ஜோர் மது பார்களை பா.ஜ., முற்றுகை
ADDED : மார் 09, 2026 06:44 AM

திருப்பூர்: சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து, திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடை பார்களை, பா.ஜ.வினர் முற்றுகையிட்டனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டில் மூன்று டாஸ்மாக் மதுக்கடைகள் பாருடன் செயல்படுகின்றன. இப்பகுதியில் செயல்படும், மூன்று பார்களில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்தும், சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் மத்தியில் புகார் உள்ளது. மதுக்கடையால் பொதுமக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர்; பள்ளி மாணவ, மாணவியர் செல்லும் பகுதியாக உள்ளதால், போதை ஆசாமிகள் இடையூறுகளை செய்கின்றனர். சட்டவிரோத மதுவிற்பனை குறித்து தகவல் தெரிந்தாலும் கூட, போலீசாரின் நடவடிக்கை பெயருக்கு உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மூன்று பார்களிலும் சட்டவிரோதமாக நேற்று அதிகாலை முதல் மதுவிற்பனை ஜோராக நடந்தது. இதையறிந்த திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. வினர் அப்பகுதியை சேர்ந்த பெண்களுடன் சென்று, பார்களை முற்றுகையிட்டனர்.
மாவட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் கார்த்தி, நல்லுார் மண்டல தலைவர் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். முற்றுகை போராட்டத்தை அறிந்து கொங்கு நகர் உதவி கமிஷனர் கணேஷ், வடக்கு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் விரைந்து சென்று பேச்சு நடத்தினர். அதில், மூன்று கடைகளில், தொடர்ந்து சட்டவிரோத மதுவிற்பனை நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல், போதை ஆசாமிகள் ரோட்டில் படுப்பது, பாட்டில்களை உடைப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பான வீடியோவை ஆதாரத்துடன் போலீசில் காட்டினர். பேச்சு நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.
பா.ஜ.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட காரணமாக, மூன்று பார்களில் மதுவிற்பனையில் ஈடுபட்ட ராஜபாண்டி, 44, மதியழகன், 32, அருண்குமார், 29 என, மூன்று பேரை கைது செய்து, 25 மதுபாட்டில்களை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

