தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பா.ஜ. வேட்பாளர் முருகன் வாக்குப்பதிவு விழிப்புணர்வு

 பா.ஜ. வேட்பாளர் முருகன் வாக்குப்பதிவு விழிப்புணர்வு

 பா.ஜ. வேட்பாளர் முருகன் வாக்குப்பதிவு விழிப்புணர்வு


ADDED : ஏப் 19, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 08:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி;தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் க்யூஆர் கோடில், அவிநாசி பா.ஜ. வேட்பாளர் முருகன் தனது ஓட்டை பதிவு செய்தார்.

திருப்பூர் மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்கு பதிவை இலக்காக கொண்டு புதிய விழிப்புணர்வு பிரச்சாரம் அவிநாசியில் துவங்கப்பட்டது.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் பிரசாரத்திற்காக தனித்துவமாக www.ThumbsupToVote.com' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அந்த இணையதளத்தில் சென்று 100 சதவீத வாக்குப்பதிவுக்கு நான் ஆதரவளிக்கிறேன் என தெரிவிக்கும் வகையில் ஆங்கிலத்தில் I support for 100% voting' என்ற பட்டனை கிளிக் செய்து, தங்களது ஆதரவை பதிவு செய்யலாம்.

தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் ட்வீட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

அவிநாசி கம்பன் கழகச் செயலாளர் மெய்ஞான மூர்த்தி 100 சதவீத வாக்குப்பதிவுக்கான க்யூஆர் கோடை வடிவமைத்துள்ளார்.

நேற்று பா.ஜ., காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவிநாசி பா.ஜ., வேட்பாளர் முருகன் 100 சதவீத வாக்குப்பதிவை பதிவு செய்யும் க்யூ ஆர் கோடில் தனது ஓட்டை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

--

நுாறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் க்யூஆர் கோடில், அவிநாசி பா.ஜ. வேட்பாளர் முருகன் தனது ஓட்டை பதிவு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us