நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்: பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ கட்சியினர் நேற்று முன்தினம் மாலை பெருமாநல்லுாரில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர்.
மண்டல தலைவர் முத்துகுமார், திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சின்னசாமி, ஒன்றிய பொது செயலாளர் குமார், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜோதிமணி மற்றும் நிர்வாகிகள் கைத்தப்பன், சந்துரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

