/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீசுடன் தகராறு பா.ஜ., நிர்வாகி கைது
/
போலீசுடன் தகராறு பா.ஜ., நிர்வாகி கைது
ADDED : ஜன 04, 2026 06:50 AM
திருப்பூர்: மதுபோதையில், போலீசாருடன் தகராறு செய்த பா.ஜ., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், கே.வி.ஆர்., நகர், சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் , முதல் நிலை போலீசாக பணிபுரிபவர் கருப்பையா, 38. அவர் நேற்று முன்தினம் இரவு பெரியாண்டிபாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.
அவ்வழியாக எஸ்.ஆர்., நகரைச் சேர்ந்த செல்வம், 42, மது போதையில் நடந்து வந்தார்.
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கருப்பையாவிடம் தேவையற்ற வகையில் பேசி தகராறு செய்தார். இருவரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், செல்வம் அங்கிருந்த ஹெல்மெட்டை எடுத்து கருப்பையாவைத் தாக்கினார்.
புகாரின்படி, சென்ட்ரல் போலீசார் செல்வத்தை கைது செய்தனர். செல்வம், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., பிரசார அணி செயலராக உள்ளார்.

