ADDED : ஏப் 07, 2025 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பா.ஜ., கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஸ்தாபன தினமான நேற்று திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகளை கட்சியினர் ஏற்பாடு செய்தனர்.
மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் மூத்த நிர்வாகி பழனிசாமி கட்சி கொடியை ஏற்றினர். நிர்வாகிகளுடன் கட்சியின் கொள்கைகள், தியாகங்கள் மற்றும் கட்சி குறித்த தகவல்கள், வளர்ச்சிகள் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். மாநில செயலாளர் மலர்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மண்டல அலுவலகத்தில் இதுபோன்று கொடியேற்றப்பட்டது. வரும், 12ம் தேதி வரை அன்றாடம் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

