ADDED : ஏப் 09, 2025 07:12 AM

அ நிறம் | அளவு
அவிநாசி; பா.ஜ., ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, அயோத்தி கர சேவகர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவிநாசி பா.ஜ., நகர தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். நீலகிரி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் கதிர்வேலன், மூத்த நிர்வாகி செல்வராஜ், நகர முன்னாள் தலைவர் தினேஷ்குமார் மாவட்ட துணை தலைவர் சண்முகம், கரசேவகர்கள் சீனிவாசன், நாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அவிநாசியிலுள்ள கால்நடை மருத்துவமனையில், எக்ஸ்-ரே, ஸ்கேன், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க அனைத்து விதமான மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர, மத்திய அமைச்சர் முருகனிடம் மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
