ADDED : ஏப் 11, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி வட்டார பா.ஜ.,சார்பில், அவிநாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்ற கட்சி ஸ்தாபன விழா மற்றும் பயிலரங்கம் நடைபெற்றது.
கருவலுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு ஒன்றிய தலைவர் பிரபு ரத்தினம் வரவேற்றார். கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, நீலகிரி லோக்சபா தொகுதி பா.ஜ., இணை பொறுப்பாளர் கதிர்வேலன், மாவட்ட துணை தலைவர்சண்முகம் ஆகியோர் பேசினர். மாவட்டத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில சிந்தனையாளர் பிரிவு செயலாளர் கணியாம்பூண்டி செந்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர தலைவர்கள் ரமேஷ் (அவிநாசி), சண்முகபாபு (பூண்டி),ஒன்றிய தலைவர்கள் கணேசன், ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.