/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளருக்கு பா.ஜ., சார்பில் விருந்து
/
துாய்மை பணியாளருக்கு பா.ஜ., சார்பில் விருந்து
ADDED : செப் 27, 2025 12:15 AM
திருப்பூர்; பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு துாய்மைப் பணியாளர்களுக்கு பா.ஜ.வினர் மதிய உணவு விருந்தளித்தனர்.
பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ.வினர் சேவை வாரம் என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். அதன்படி பல்வேறு வகையில் சேவை வழங்கி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அதில் ஒன்றாக, திருப்பூர், கருவம்பாளையம் மண்டல் பா.ஜ., சார்பில் துாய்மைப் பணியாளர்களுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது. கருவம்பாளையம் கதர் காலனி பகுதியில் கட்சி நிர்வாகி ஒருவர் வீட்டில் இந்த விருந்து நடைபெற்றது. மாவட்ட பா.ஜ. தலைவர் சீனிவாசன், மாவட்ட பொது செயலாளர் அருண்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாநகராட்சி வார்டு 42 மற்றும் 43 ஆகிய பகுதிகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு வடை, பாயாசத்துடன் சைவ உணவு பரிமாறப்பட்டது. பகுதி நிர்வாகிகள் வெங்கடாசலம் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.