தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆர்.எம்.எஸ்., அலுவலகம் மாற்ற பா.ஜ. எதிர்ப்பு

 ஆர்.எம்.எஸ்., அலுவலகம் மாற்ற பா.ஜ. எதிர்ப்பு

 ஆர்.எம்.எஸ்., அலுவலகம் மாற்ற பா.ஜ. எதிர்ப்பு


ADDED : ஜூன் 23, 2026 07:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 07:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சீனிவாசன் அறிக்கை:

மத்திய அரசு நிதியில் காலேஜ் ரோட்டில் கட்டப்பட்டு, அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் திறக்கப்படாமல் உள்ள புதிய ஆர்.எம்.எஸ். கட்டடத்தை உடனடியாகத் திறந்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரும் திருப்பூரில், இரவு நேரங்களில் தபால் மற்றும் பார்சல்களை அனுப்பப் பொதுமக்கள், தொழில்துறையினர் இந்தச் சேவையைத்தான் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 5 ஆயிரம் பார்சல்களைக் கையாளும் இந்த அலுவலகம், கடந்த 5 மாதங்களில் மட்டும் 1.70 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இங்கு 50 நிரந்தர பணியாளர்களும், 25 தற்காலிக பணியாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.

உள்ளூர் நிலவரம் தெரியாமல் அதிகாரிகள் இந்த அலுவலகத்தை மூட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அமைச்சர் முருகன் வாயிலாக மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்க ப்பட்டு, தபால் நிலையத்தை மூடும் நடவடிக்கையைக் கைவிடுவதாக அமைச்சர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us