தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்ற பா.ஜ. மனு

 நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்ற பா.ஜ. மனு

 நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்ற பா.ஜ. மனு


ADDED : ஜூன் 28, 2026 02:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 02:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் குமார் நகரில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பா.ஜ.வினர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சீனிவாசன் தலைமையில் கட்சியினர், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரியிடம் அளித்த மனு:

தென்னம்பாளையம் மற்றும் பல்லடம் ரோட்டில் உள்ள உழவர் சந்தை அருகே, சில மொத்த வியாபாரிகள் மீண்டும்2 கி.மீ துாரம் சாலையோரம் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.

குமார் நகர் 60 அடி ரோட்டில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து உணவு கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் கடும் இடையூறு ஏற்படுகிறது. மாநகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை முறைப்படுத்த வேண்டும்; சட்டவிரோத மது விற்பனையைத் தீவிரமாகக் கண்காணித்துத் தடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us