ADDED : டிச 05, 2024 06:16 AM
திருப்பூர்; திருப்பூர் மாநகரில் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி, பா.ஜ., வினர் மனு அளித்தனர்.
இது குறித்து, பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையில், அக்கட்சியினர், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
மின் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வால் பல சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி உயர்வை கண்டிக்கும் கம்யூ., கட்சி உள்ளே கையெழுத்து போட்டுவிட்டு, வெளியே கண்டிப்பது போல் கபட நாடகம் செய்கின்றனர். குறிப்பிட்ட காலத்துக்குள் வரி உயர்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், பா.ஜ., சார்பில், அறவழி போராட்டம் மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகள் எதுவும் பராமரிப்பில்லாமலும், குண்டும், குழியுமாக புழுதியும் ஆக உள்ளது. பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக ரோட்டில் செல்கிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.