/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கூவாத' கோழி ஆராய்ச்சி மையம் மத்திய அமைச்சரிடம் பா.ஜ., மனு
/
'கூவாத' கோழி ஆராய்ச்சி மையம் மத்திய அமைச்சரிடம் பா.ஜ., மனு
'கூவாத' கோழி ஆராய்ச்சி மையம் மத்திய அமைச்சரிடம் பா.ஜ., மனு
'கூவாத' கோழி ஆராய்ச்சி மையம் மத்திய அமைச்சரிடம் பா.ஜ., மனு
ADDED : ஜன 20, 2025 06:26 AM

பல்லடம் : பனிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள கோழி இன நோய் ஆராய்ச்சி மையத்தை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, மத்திய இணை அமைச்சர் முருகனை சந்தித்து, பா.ஜ.,வினர் கோரிக்கை மனு அளித்தனர்.
மேட்டுப்பாளையத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேண்டி, மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று மேட்டுப்பாளையம் வந்தார். அவரிடம், பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் பிரதீப் சக்தி தலைமையிலான நிர்வாகிகள், அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
மனு விவரம்
பல்லடம் ஒன்றியம், பனிக்கம்பட்டி ஊராட்சி, சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில், கோழி இன நோய் ஆராய்ச்சி மையம் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுக்கு முன், மத்திய அரசின் நிதி உதவியுடன், 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம், புனேவுக்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய கோழி ஆராய்ச்சி மையம். இங்கு, விவசாயிகள் வளர்க்கும் கோழிகள், கால்நடைகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்படும் நோய் தொற்று பாதிப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, ஆய்வுகள் அடிப்படையில், உரிய தீர்வு காண முடியும்.
இதற்காக, இந்த ஆராய்ச்சி மையத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. திறப்பு விழா செய்யப்பட்டது முதல், இந்த ஆராய்ச்சி மையம் முழுமையாக செயல்படுவதில்லை. மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், பாதுகாவலர்கள் என, 40க்கும் அதிகமான பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 3 பேர் மட்டுமே இங்கு வேலை பார்க்கின்றனர்.
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியில் கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக இருப்பதால், இதனைச் சார்ந்த கோழிப்பண்ணை நிறுவனங்களும் அதிக அளவில் செயல்படுகின்றன. இந்த ஆரோக்கிய மையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தால், கோழி உற்பத்தி சார்ந்த தொழில் மேம்பட பெரிதும் உதவுவதுடன், விவசாயிகளும் அதிகம் பயன்பெறுவர். பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆராய்ச்சி மையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.